இன்று காலையில் எழுந்ததும் நீங்கள் குடித்தது காபியா, டீயா? கும்பகோணமோ, பெங்களுரோ காபிக்குத் தனிமவுசு தான்! பில்டர் காபி, காப்பிசினோ, பிளாக் காபி என வேறுபட்டாலும், கொட்டும் மழையில் பால்கனியிலோ, சாலையோரக் கடையிலோ அமர்ந்து கொண்டு ஆவி பறக்கும் காபியை மெல்ல மெல்ல ரசித்துக்குடிப்பது அலாதி மகிழ்ச்சிதான்! இந்தக் காபியை வைத்தே பெரிய கலக்குகலக்கி பணத்தைக் கொட்ட வைத்துள்ளனர் காபிடே நிறுவனத்தினர். 20 வருடங்களில் சுமார் 1400-க்கும் மேல் கிளைகள்! விற்பனை ரூ.2,500 கோடியாம்!! அரட்டை அடிப்பதற்காகவே மக்கள் காபி குடிக்க வருவார்கள் எனும் மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்து அதையே பெரும் வியாபாரமாக்கி விட்டார்கள்!!! நீங்கள் தங்க நகையை அடகுவைத்துக் கடன் வாங்கியிருக்கிறீர்களோ இல்லையோ, நிச்சயம் முத்தூட் பைனான்ஸ் பற்றித் தெரியாமல் இருக்காது. 128 வருட பழமையான நிறுவனம் என்றாலும், அவர்கள் விசுவரூபம் எடுத்தது 2011-12ல் தான். தங்கம் விலை தாறுமாறாக ஏறியதும், முன்னமே அடகு வைத்த நகையின் மேலேயே அதிகப்பணம் பெற்றுக் கொள்ளுங்கள் எனும் தனித்துவம் காட்டினார்கள்; தங்கத்திற்குக் கதவைத் திறந்து கொண்டார்கள்! இன்று அவர்களுக்கு 4000-க்கும் மேலே கிளைகள். நம்ம ஊர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸையே எடுத்துக் கொள் ளுங்கள். மைசூர்பாக்கு எனும் நமது பாரம்பரிய இனிப்பை மைசூர்பா என்று பெயர்சுருக்கி, பெயர்சூட்டி இன்று உலகம் முழுவதும் கொண்டு சென்று விட்டார்கள். நாம் நம் வாழ்வில் பலமுறை தற்பொழுது சூழ்நிலை சரியில்லை என வருத்தப்படுகின்றோம். அச்சந்தர்ப்பங்களில் அடக்கி வாசிப்பது சரிதான். ஆனால் சில சமயங்களில் நாமே எதிர்பார்க்காத அளவில் சாதகமான சூழ்நிலையும் அமைவது உண்டா இல்லையா? கிடைப்பதற்கு அரிய வாய்ப்பு வரும் பொழுது உடனே அதைப் பயன்படுத்திக் கொண்டு செயற்கரிய சாதனைகளையும் செய்யுங்கள் என்கிறார் வள்ளுவர். வாய்ப்புக் கிடைக்கும் பொழுது தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் வெற்றி பெற்றவர்கள் பலரிடமும் காணப்படும் ஓர் ஒற்றுமை. அதிகாரம் கொடுக்கப்படுவதில்லை; அது எடுத்துக் கொள்ளப்படுவது என்பார்கள்! வாய்ப்புகளும் அப்படித்தானே!! பிஎஸ்என்எல் பல ஆண்டுகளாக இருந்துவரும் நிறுவனம். வீட்டுத் தொலைபேசியின் உபயோகம் குறைந்து, கைபேசியின் ஆதிக்கம் தொடங்கிய பொழுது மகத்தான வாய்ப்புகள் உருவாகின. ஆனால் அந்நிறுவனம் கோட்டை விட்டது. அக்கோட்டையை ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பிடித்துக் கொண்டன. வாய்ப்புகளை நாம் தவறவிடுவதற்குக் காரணம் அவை கடினமான சவால்களைப் போலத் தோற்றமளிப்பதுதான் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன். எனவே அரிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். தப்பிவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். வெற்றிக் கொடி நாட்டுங்கள்! எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல் (குறள் 489)
Thursday, 19 November 2015
பிற ஆசிய நாடுகளிலிருந்து வளர்ச்சி யடைந்த நாடுகளில் குடியேறியவர் களோடு ஒப்பிடுகையில் இந்தியா விலிருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். சிங்கப்பூர் (55.8%), பிலிப்பைன்ஸ் (52.3%), சீனா (43.8%) என்ற அளவில் உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவுசார் சமூகத்தின் பங்களிப்பு கணிசமானது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தகையோர் அதிகமிருப்பது கண்கூடு. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்களால் அந்நாடுகள் முன்னேறியுள்ளனவா என்று கேட்டால் அத்தகைய கேள்விக்கு விடை கிடைக்காது. ஏனென்றால் பிற நாடுகளிலிருந்து வந்து சேர்ந்த அறிவுசார் மக்களின் பங்களிப்பு வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகம். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அறிவுசார் சமூகம் இந்தியாவிலிருந்து வெளியேறுவது குறித்து அவ்வப்போது ஆட்சியாளர்கள் கவலைப்படுவர். ஆனால் அவர்களை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத்தான் எடுப்பதில்லை. கடந்த செப்டம்பரில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலிருந்து வெளியேறுவோர் (பிரைய்ன் டிரெய்ன்) இந்தியா திரும்பு வதற்கான காலம் கணிந்து வருகிறது என்றார். இந்தியாவிலிருந்து வெளியேறி வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறி யுள்ள அறிவுசார் இந்தியர்களின் எண்ணிக்கை 36 லட்சமாகும். 2000-வது ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் இது 83 சதவீதம் அதிகம். அதாவது கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. அதிகம் படித்த அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாடு களில் குடியேறிய அறிவு சார் சமூகத்தின் எண்ணிக்கை மொத்தம் வெளியேறியவர்களில் 62 சதவீதமாகும். பிற ஆசிய நாடுகளிலிருந்து வளர்ச்சி யடைந்த நாடுகளில் குடியேறியவர் களோடு ஒப்பிடுகையில் இந்தியா விலிருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். சிங்கப்பூர் (55.8%), பிலிப்பைன்ஸ் (52.3%), சீனா (43.8%) என்ற அளவில் உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 22 லட்சமாகும். இந்தி யாவுக்கு அடுத்தபடியாக அதிக அறிவுசார் சமூகத்தை இழந்த நாடு மெக்சிகோ. இங்கிருந்து 12 லட்சம் பேர் வெளியேறி வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறியுள்ளனர். அறிவுசார் சமூகத்தில் 100 பேரில் 3 பேர் உயர் படிப்பு மற்றும் வேலைக்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் குடியேறி யுள்ளனர். அதேசமயம் டாக்டர்கள், நர்சுகளின் எண்ணிக்கை மிக அதிகம். 100 பேரில் 8 பேர் இந்திய டாக்டர்களாக உள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் 86 ஆயிரம் இந்திய டாக்டர்கள் புரிவ தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்த இடத்திலிருக்கும் சீனா விலிருந்து வெளியேறிய டாக்டர்களின் எண்ணிக்கை 26 ஆயிரமாகும். அதே சமயம் இந்திய செவிலியர்கள் (நர்சுகளின்) எண்ணிக்கை 70,471 ஆக உள்ளது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களை உருவாக்கும் நாடு இந்தியாதான். ஆனால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தியாவில் 1,800 பேருக்கு ஒரு டாக்டர் உள்ள நிலையில் இதுபோன்று டாக்டர்கள் அதிக எண்ணிக்கையில் வெளியேறுவது மனித வளத்தையும் பாதிக்கும். பெரும்பாலும் ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, சிலி, செக். குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கொரியா, லக்ஸம்பர்க், மெக்சிகோ, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கீசு, ஸ்லோவோக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 34 நாடுகளுக்கு (ஓஇசிடி நாடுகள்) இந்தியர்கள் செல்கின்றனர். இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் செல்கின்றனர். இந்தியாவிலிருந்து அறிவுசார் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அந்நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்று சர்வதேச பொருளாதார அறிஞர் கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகைய அறிவுசார் மக்களின் திறமைக்கேற்ற வேலை இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான சூழலாகும். வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய அறிவுசார் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது நமக்கு சாதகம் என்று மோடி குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திரும்பினால்தான் சாதகம். அதற்கான காலம் எப்போது உருவாகும்? .
ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் பிஎஃப்
மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம் எவ் வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர, மொத்த சம்பளம் எவ்வளவு அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? எதற்கு பிடிக்கிறார்கள் என்பது தெரியாது. வருமான வரிக்காக பிடிக்கிறார்களா அல்லது வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள் என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை. எவ்வளவு பிடிக்கிறார்கள்? பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள். சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன. நிரந்தர கணக்கு எண் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம். தெரிந்துகொள்வது எப்படி? சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும். இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம். பணம் எடுப்பது எப்படி? பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம். ஆன்லைன் பரிவர்த்தனை வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும். பங்குச் சந்தையில் பி.எஃப். ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது. ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான். நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
Wednesday, 11 November 2015
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!”
இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது. பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது. நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும். போலிப் பகலாகும் இரவு இன்றைய தலைமுறையினர் படும் பல அவதிகளுக்குக் காரணம் தூக்கமின்மைதான். வேகமான வாழ்க்கை இரவை விழுங்கிவிட்டது. பகல் முடிந்தும் இரவை ஒரு போலிப் பகலாக உருவாக்குகிறது. ஐந்து மணிக்கு வேலையை முடித்து ஆறு மணிக்கு வீடு வந்தால் குடும்பத்துடன் உறவாடி உணவருந்தி இரவு பத்துக்குத் தூங்கச்சென்றால் மறு நாள் பளிச்சென்று விடியும். இன்று வேலையும் சாலையின் நெரிசலும் எட்டு மணிக்கு முன்பாக வீடு திரும்ப விடுவதில்லை. ஒரு காபி குடித்துவிட்டு டி.வி. சீரியல்களில் உட்கார்ந்தால் பத்து மணிக்குத்தான் தாமதமான, ஆனால் கனமான சாப்பாடு. பிறகு வாட்ஸ் அப் செய்திகளும் கிரிக்கெட்டும் பார்க்கிறோம். ஆடல், பாடல், கேம் ஷோக்களைப் பார்த்து அயர்ந்துபோகிறோம். அதற்குப் பிறகு படுப்பதற்கு செல்கையில் நடுஇரவு ஆகிவிடுகிறது. படுக்கையில்தான் எல்லா வலிகளும் பெரிதாகத் தெரிகின்றன. சாலை வெளிச்சங்களும் இரைச்சல்களும், அண்டை வீடுகளின் டி.வி சத்தங்களும் தூங்க விடாது. அப்போதுதான் பாக்கி உள்ள அனைத்து வேலைகளையும் மனம் பட்டியல் போடும். கண்ணை மூடியபின் வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் செய்தியையும் பார்க்கத் தூண்டும். வெட்டிச் செய்தி என்று தெரிந்த பின்னும் பதில் போட வைக்கும். பின்பு ஃபேஸ்புக் போகத் தூண்டும். ஃப்ரிட்ஜில் தண்ணீர் குடித்துவிட்டு வருகையில் ‘தூக்கம்தான் வரவில்லையே? ஏதாவது வேலை பார்த்தால் என்ன?” என்று லேப்டாபை எடுக்க வைக்கும். பின் அயர்ச்சியில் படுக்கையில் விழும்போது ‘சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே!’ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும். சிந்தனைகளைக் கழட்டுங்கள் வாழும் முறையில் மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள முடியாது. இதற்கு என்ன செய்யலாம்? என் பரிந்துரைகள் இதோ: ஏ.ஆர். ரஹ்மான் மாதிரியான பிஸியான பிரமுகர்களில் ஒருவராக நீங்கள் இல்லாதவரை பகல் பொழுது வேலைக்கும் இரவுப் பொழுது ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டும்போது உங்கள் வேலை பற்றிய சிந்தனைகளையும் கழட்டி வைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை கொடுத்துக் கொள்ளுங்கள். தாமதமானால் டீ, காபிக்குப் பதிலாக நேராக உணவுக்குச் செல்லுங்கள். நல்ல குளியலுக்கு பிறகு உண்ணும் மென்மையான இரவுச் சாப்பாடு உங்களுக்கு இளைப்பாறுதல் தரும். டி.வியைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மன நலம் காக்கப்படும். வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். அவசியச் செய்திகள், அழைப்புகள் முடிந்தபின் கைபேசியை தள்ளி வையுங்கள். தூக்கத்துக்குத் தயார் செய்தல் முக்கியம். படுத்த பிறகு குடும்பம், அலுவலகம், அக்கம் பக்கம் என செய்திகள் பகிர்வது உங்களை நல்ல உணர்வுகளுடன் தூங்க வைக்காது. குறிப்பாக, தீராத பிரச்சினைகளை விவாதிக்க வேண்டாம். இயலாமை, எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் சிந்தனைகளைப் பெருக்கி மனதை அமைதி இழக்கச் செய்யும். மனதைக் காலி செய்து, கழுவித் துடைத்து தூக்கத்துக்குத் தயார் செய்தல் அவசியம். எந்த சிந்தனையும் இல்லாது வரும் அந்த உறக்கம் அவ்வளவு நிர்மலமாக இருக்கும்! கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை நல்லது. அல்லது நல்ல இசை போதும். நன்றி கூறுதல், தியானம், அஃபர்மேஷன் என எது உங்கள் மனதுக்குப் பிடித்ததோ அதைச் செய்து மற்ற சிந்தனைகளை ஓட்டிவிடுங்கள். நீங்கள் எந்த நேரம் தூங்க ஆரம்பித்தீர்கள் என்று தெரியாத அளவுக்கு உறக்கத்துக்குள்ளே நழுவியிருப்பீர்கள். நல்ல தூக்கம் மறு நாள் எழும்போது ஒரு சாதனை உணர்வைத் தரும். எழுந்தவுடன் பசியும் புத்துணர்ச்சியும் வர வேண்டும். மனித அத்துமீறல்கள் இல்லாத வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளில் அவற்றைப் பார்க்கலாம். அலாரத்தைப் பார்த்து அலறி எழுந்து, அவசரத்தில், வேகத்தில், கோபத்தில் ஓடும் அட்ரினல் வாழ்க்கை முறை உங்களை விரைவில் வயோதிகத்தில் தள்ளிவிடும். எதிர்மறை எண்ணங்களை எளிதில் கொண்டு வந்துவிடும். வேகம் விவேகம் அல்ல என்பது சாலைகளுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும்தான். வேகத்தை மட்டுப்படுத்த நம் இரவுகளை சமன்படுத்துவோம். ஆறு முதல் எட்டு மணி நேர அமைதியான இரவுத்தூக்கம் அவசியம். வளர்ந்த நாடுகளை பின்பற்றும் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். தூக்க மாத்திரைகள் அதிகம் நுகரப்படும் தேசங்கள் அவை. ரசாயன மருந்துகளின் துணை இல்லாமல் தூங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும் வரலாம். மறந்துவிட வேண்டாம். என் சிறு பிராயத்தில் சிலோன் ரேடியோ மிகப் பிரபலம். அதில் வரும் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியை நாங்கள் தவற விட மாட்டோம் அதில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல், “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!” ஒவ்வொரு முறையும் அந்த பாடல் முடிகையில் தூங்கிப்போன நிலையில் இருக்கும் உடலும் மனமும். இப்படி ஒரு தலைமுறையையே அமைதிப்படுத்தி தூங்க வைத்த பாடல்கள் உண்டு. நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தரும் பெரு வரம் நல்ல தூக்கம். அதற்கான இடையூறுகளைக் களைந்து, நல்ல சூழலை அமைத்து, நல்ல முன்மாதிரிகளாய் நீங்கள் தூங்க ஆரம்பித்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைப் பின்பற்ற மாட்டார்களா என்ன?
Thursday, 8 October 2015
இதைத்தான் வள்ளுவரும் “சிசுக்கள் அணிக்கு எதிராக சிக்ஸர் அடிப்பதை விட ஆஸ்திரேலிய அணியிடம் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதே பெருமை” என்கிறார்.
ஔரங்கசீப், ராஜேந்திர சோழன் அலெக் ஸாண்டர். இந்த மன்னர்களிடம் பொதுவான ஒற்றுமைகள் சில இருக்கின்றன. டெல்லி வாழ் ஔரங்கசீப் கிழக்கே சிட்டகாங்கில் நின்று “நம்ம இடந்தேன்...”என்பார். தஞ்சையிலிருந்து கிளம்பிய ராஜேந்திரனுக்குக் கடாரத்தில் “எங்கள் அரசரே..!” என்று நோட்டீஸ் ஒட்டினார்கள். “கிரேக்க கிங்கே...!” என்ற பேனர்களை அலெக்ஸ் சிந்து நதிக்கரையில் கண்டிருக்கக்கூடும்! அந்த அளவுக்குத் தங்கள் ராஜ்யங்களை இவர்கள் விரிவுபடுத்தினார்கள். ஆனால், இவர்களுக்குப் பிறகு அரசு வீழ்ந்ததற்கு அரசின் பரப்பு பெரியதாக இருந்ததும் காரணமாகச் சொல்லப்பட்டது. இவர்களது பிரதிநிதிகள் சொதப்பினார்கள். பெரிய அரசு. பிரச்சினைகளின் எண்ணிக்கையும் அதிகம். இவற்றைச் சமாளிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. அகலக்கால் வைத்து அவஸ்தைப்பட அரசர்களால் மட்டும்தான் முடியுமா? “பிஸினஸ்ல கவனம் செலுத்த முடியல...” என்றார் நண்பர். என்ன பிஸினஸ் என்று கேட்க வில்லை. காரணம், அவர் ட்ராவல்ஸ் நடத்துவதாக நினைத்திருந்தேன். அப்புறம் சிட்ஃபண்ட், ரியல் எஸ்டேட் தொழிலுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. கூடுதலாக ஷேர் மார்க்கெட், கட்டிட காண்ட்ராக்டர், ஊரில் விவசாயம்... மொத்தத்தில் “இவரைப் பாத்தாவது கற்றுக்கொள்ளுங்களேன்…” என்று மனைவி சுட்டிக்காட்டி, கணவனுக்கு காம்ப்ளெக்ஸ் ஏற்படுத்த ஒரு உழைப்பாளி இருப்பார், இல்லையா? அந்த அவர்தான்! நடுவில் ஏதோ ஒரு தொழிலில் பணம் லாக் ஆகி, ஒரே பாடலில் முன்னேறும் காட்சி பாதியில் நிற்க, நண்பருக்கு ரத்த அழுத்தம், கொதிப்பு எல்லாம் நிகழ்ந்தன. படிப்பினை என்ன? போதும் என்ற மனநிலை இல்லாததாலேயே சரியத் துவங்கும் அரசுகள், மனிதர்களின் வாழ்க்கைகள்... அளவோடு இருந்திருந்தால்,இவர்கள் இன்னும் சிறிது காலம் தாக்குப் பிடித்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லையா...? ஆனால், இப்படியெல்லாம் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால், இவர்கள் இதற்கு முன்பே அழிந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவர் ஏற்கெனவே செய்துவரும் வேலைகள் போதாமல் “ஊறுகாய் தயாரிக்கலாம்னு இருக்கேன்” என்றால், ஒருவர் எங்கேயோ இருந்துகொண்டு, தொலைதூர நாட்டைக் கைப்பற்றுகிறார் என்றால், அவரிடம் அதற்கான ஆற்றலும் திறமையும் இருப்பதாகத்தானே அர்த்தம்? கனவைச் சாத்தியமாக்கும் நிபுணத்துவத்தை, வீரர்களைக் கொண்டிருக்கிறார் என்றுதானே பொருள்? நாடு நீங்கி கடல், மலை கடந்து வீரம் பொழியக்கூடிய சக்தி வாய்ந்த வீரர்களை ஒரே இடத்தில் கத்தியைத் துடைக்கவும், குதிரைக்குப் புல் போடவும் மட்டும் பயன்படுத்தினால்...? “சும்மா இருப்பதே சுகம்” என்று நண்பரைக் கட்டிப் போட்டால்...? அந்த சக்தி, அந்தத் திறமை, சும்மா இருக்காது. முடக்கப்படும் சக்தி தன்னை வெளிப்படுத்தியே தீரும் - பல சமயங்களில் எதிர்மறையாக. அதை அந்த நாடோ வீடோ தாங்காது. சிங்கம் ஒன்றுக்குப் பூனை வேடமிட்டு “உன் பெயர் டாம்” என்றால் அது எவ்வளவு நேரம்தான் ‘மியாவ்’ என்று கத்தும்? ஒரு கட்டத்தில் “ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெய்ட்டுடா… பாக்கறியா?” என்று காலை ஓங்கிவிடாதா?. ஆறாம் வகுப்பு மாணவனை ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளோடு இருக்க வைத்துப் பாருங்கள். அன்பைப் பொழிதல், அ, ஆ சொல்லிக்கொடுத்தல் எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான். அப்புறம் “இந்தப் பையைத் தூக்கீட்டு வாடா...” என்ற கட்டளையும் “இந்த அண்ணன் அடிச்சுட்டான் மிஸ்..”என்ற அவலக் குரலும்தான் கேட்கும். சிங்கம் அப்படித்தான் இருக்க முடியும். பிடித்து வைத்தால் தான் இருக்கும் இடத்தையே காடாக மாற்றிவிடும். சரியாக வேலை கொடுக்கப்படாத வீரர்கள் உள்ளூரில் பிரச்சினை பண்ணத்தான் செய்வார்கள். செல்லை நோண்டத் தெரிந்த கை சும்மா இருக்காது. ஆற்றல் கொண்ட மனம் என்பது சாவி கொடுக்கப்பட்டு இயங்கும் நிலையில் வைக்கப்பட்ட வாகனம் மாதிரி. சரியாக இயக்கினால் அது ஒழுங்காகப் பயணிக்கும். இல்லை என்றால் அதுவாகவே ஓடி, முட்டி மோதி சேதத்தை ஏற்படுத்திவிட்டு வீழும். திறமை இல்லாமல் இருப்பது குற்றமல்ல. ஆனால் திறமை இருப்பது தெரிந்தும் அதைப் பயன்படுத்தவில்லை என்றால் அது மன்னிக்க முடியாத பாவச் செயலாகும். அதை உங்களுக்கு அளித்த இயற்கையை அவமானப்படுத்துவதாகும். “போதும்… எதுக்கு வீணா கஷ்டப்பட்டுக்கிட்டு?” என்ற போலிச் சமாதானங்கள் பின்னாட்களில் திறமையைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற மனப் புழுக்கத்தில் கிடந்து உழலவே பயன்படும் (எனக்கு இருக்கற திறமைக்கு நான்லாம்... ப்ச… தப்பு பண்ணிட்டேன்...). அந்த ஆற்றலைப் பயன்படுத்தித் தோல்விகளும் பிரச்சினைகளும் வந்தால்கூட அது பெருமையே. இதைத்தான் வள்ளுவரும் “சிசுக்கள் அணிக்கு எதிராக சிக்ஸர் அடிப்பதை விட ஆஸ்திரேலிய அணியிடம் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதே பெருமை” என்கிறார். எனவே, மன்னர்களின் ராஜ்ஜியங்கள் வீழ்ந்தததற்கும், நண்பரின் சிக்கல்களுக்கும் காலப்போக்கில் ஏற்படும் பிரச்சினைகளும் சரியாகத் திட்டமிடாதலும்தான் காரணமே தவிர, அவர்கள் முயற்சி செய்ததே தவறு எனக் கூற முடியாது. அகலக்கால் வைப்பதில் தப்பில்லை. ஆழ்ந்து யோசிக்காமல் வைப்பதுதான் தவறு!
ஆங்கிலேயர்கள் ஜமீன்தாரி முறையைத் திணித்து, இந்திய விவசாயிகளை எவ்வாறு கொடூரமாகச் சுரண்டினர் என்பதும், தங்கள் நாட்டுப் பொருட்களை இந்தியச் சந்தையில் குவித்து இந்திய உற்பத்தியாளர்களை எப்படிச் சாகடித்தார்கள் என்பதும் இந்நூலில் விவரிக்கப்படுகிறது.
இந்நூல் தமிழில் 1949-ல் முதல் பதிப்பைத் தொடங்கி, 2014 வரை 33 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இதன் அளவிட முடியாத மதிப்பைப் புரிந்துகொள்ளலாம். இந்திய குக்கிராமத்தில் பிறந்து, சோவியத் ஒன்றியத்தின் லெனின்கிராடு சர்வகலாசாலையில் பேராசிரியராக உயர்ந்தவர் ராகுல்ஜி எனப்படும் ராகுல சாங்கிருத்தியாயன். இவரது புத்தகங்களில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் உலகின் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு விரிவாக வாசிக்கப்பட்டுவரும் நூல். 1946-ல் இந்தியில் எழுதப்பட்ட இந்நூல் 1949 ஆகஸ்டில் தமிழில் வெளியிடப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்துத் தனது தமிழ்ப் புத்தகாலயம் மூலம் கண.முத்தையா வெளியிட்டார். மூல நூலாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் சிறையிலிருந்து எழுதிய நூல் இதுவாகத்தான் இருக்க முடியும். கி.மு.6000-ம் ஆண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான நூல் இது. வாசகர்கள் எழுதில் புரிந்து கொள்ளும் வகையில், முதலில் தான் எழுதிய 'மனித சமூகம்' என்ற நூலை, 20 கதைகளாக ராகுல்ஜி சொல்லியிருக்கிறார். சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் மனித குலம் (ஹோமோசாப்பியான்கள்) தோன்றியதிலிருந்து கி.மு. 2500-ம் ஆண்டுக்கு பிந்தைய வரலாறுதான் நம்மிடம் உள்ளது. 2500க்கும், 6000-க்கும் இடைப்பட்ட வரலாற்றை வேதங்கள் தொடங்கி பல்வேறு இலக்கிய நூல்களை ஆதாரமாகக் கொண்டு ராகுல்ஜி இந்நூலை வரைந்துள்ளார். அதில் ஓரளவு கற்பனையும் கலக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட இந்நூல், மதப் பழமைவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. ஆனால், இந்நூல் ஏற்படுத்திய மிகப் பெரிய தாக்கம் எதிர்ப்பாளர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட்டுவிட்டது. இந்நூல் வெளியானவுடன் அதனைப் படித்த அறிஞர் அண்ணா, “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது” என்று பாராட்டினார். அன்றைய சென்னை மாகாணத்தில், பிரகாசம் தலைமையிலான சட்டமன்றத்தில் அன்றைய கல்வி அமைச்சர் சுப்பராயன் “இது வெறும் கட்சிப் பிரச்சார நூல் அல்ல. நல்ல தத்துவ விளக்க நூல். எனவே இதனைத் தடை செய்யக் கூடாது” என்று பேசினார். மனித குலம் எங்கே முதலில் தோன்றியது, எப்படி உலகின் பல பகுதிகளுக்குப் பரவியது, அப்போது மனித குலம் சந்தித்த சவால்கள், போராட்டங்கள், இழப்புகள், வளர்ச்சி ஆகிய அனைத்தையும் இந்நூல் பதிவு செய்கிறது. அடிமைச் சமுதாயம் உருவானது எப்படி? ஆரம்பத்தில் மனித இனக் குழுக்கள் புராதன கம்யூனிஸ சமுதாயமாக இருந்தன. பெண்ணின் தலைமையில் இயங்கின. பின்னர் கால்நடைச் சொத்துக்கள் உருவான பிறகு, இனக் குழுக்களிடையே கடும் மோதல்கள் உருவாகின. அப்போர்களில் தலைமை தாங்கி வெற்றிபெற்ற ஆண் அந்த இனக் குழுவின் தலைவனானான். இவ்வாறு தலைமைப் பதவி ஆண்களிடம் வந்தது. பெண்கள் ஒரு குழுவின் சொத்துக்களாகச் சுருக்கப்பட்டு அடிமைகளானார்கள். இனக்குழுக்களுக்கிடையே நடந்த போர்களில் கால்நடைகளுடன் பெண்களும் கவர்ந்துவரப்பட்டனர். தோல்வியுற்ற குழுக்களிடம் கைப்பற்றப்பட்டவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். இவ்வாறு அடிமைச் சமுதாயம் உருவானது. ஆரியர்கள் என்று சொல்லப்படும் பிரிவினர் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது, அங்கு நாகரிகத்தில் வளர்ச்சி அடைந்திருந்த திராவிடர்களுடன் அவர்கள் இடையறாது போரிட வேண்டியிருந்தது. மனித வரலாறு முழுக்க மாற்றச் சக்கரம் ஓயாது சுழன்று கொண்டேயிருந்தது. இது ஆயுதங்களில், ஆடைகளில், உணவு உற்பத்தியில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அடுத்து இஸ்லாம் வரலாறு கூறப்படுகிறது. மதம் தோன்றிய விதம், அது பரவிய விதம், முகலாயர்கள் எப்படி இந்தியாவைக் கைப்பற்றினர் என்பதெல்லாம் விரிவாகக் கூறப்படுகின்றன. முகலாயர்களின் ஆட்சி மத சகிப்புத் தன்மையுடன் சுரண்டலற்ற ஆட்சியாக எவ்வாறு இருந்தது என்பதும் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் இந்திய மக்களின் நலன் குறித்து எந்தக் கவலையும் இல்லாது, செல்வத்தைச் சுருட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் இந்த நூல் சொல்கிறது. ஆங்கிலேயர்கள் ஜமீன்தாரி முறையைத் திணித்து, இந்திய விவசாயிகளை எவ்வாறு கொடூரமாகச் சுரண்டினர் என்பதும், தங்கள் நாட்டுப் பொருட்களை இந்தியச் சந்தையில் குவித்து இந்திய உற்பத்தியாளர்களை எப்படிச் சாகடித்தார்கள் என்பதும் இந்நூலில் விவரிக்கப்படுகிறது. அந்நிய ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் காந்திஜி எப்படி மக்களின் பங்களிப்புக்கு வழிவகுத்தார் என்பதை நடுநிலை நேர்க்கோடு பார்க்கிறார். மனித குல வரலாறு குறித்து நமக்கு இதுவரை இருந்துவந்த பார்வையை இந்நூல் முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. தற்போதைய சமூகத்தைப் புதிய பார்வை, புதிய அணுகுமுறையுடன் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும். கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: veeveekalai@gmail.com நூல் விவரம்: வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன் தமிழ்ப் புத்தகாலயம், தொலைபேசி 28340495, மின்னஞ்சல் - tamilputhakalayam@yahoo.com
இவன்… அந்த சமூகமாக இருப்பான்’ அது குழந்தையின் சாதி பற்றியது என உணர்ந்து மனம் வலித்தது. நாம் குழந்தைகளை எவ்வளவு மோசமாக அனுமானிக்கிறோம். நன்னடத்தை வகுப்பெடுக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.
உலகத்தின் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் குழந்தைகளை ரொம்பவும் குறைத்தே மதிப்பிடு கிறோம். குழந்தைகளின் சின்ன சின்ன முயற்சிகளுக்கு பின்னே இருக்கும் பெரிய தியாகங்களைக் கவனிக்கத் தவறுகிறோம். - அமர்த்தியா சென் இந்த ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை, பள்ளிக்கூடங்களில் நன்நடத்தை இயல் நடத்த வாரம் ஒரு வகுப்பு நேரத்தை ஒதுக்குமாறு கூறியுள்ளது. அரசின் இந்த உத்திரவை வாசித்தபோது எனக்கு மாணவர் பவித்ரனின் ஞாபகமே வந்தது. யாரும் கற்பித்து மட்டும் வருவதல்ல சமூக நீதியும் சமூக அக்கறையும் நடத்தையும் என எனக்குக் காட்டியவர் பவித்ரன். குழந்தைகளுக்கான எல்லாக் கதைகளிலும் நீதிபோதனை செய்ய வேண்டும் என்பது பலரின் கருத்து. குழந்தைகளுக்கு நீதி தேவையா என்பது என் போன்றவர்கள் கேள்வி. குழந்தைகள் திட்டம் போட்டுக் கொள்ளை அடிப்பது இல்லை. பெரிய அளவில் பொய், வாக்குறுதிகள் தருவது இல்லை. லஞ்சம் அவர்களது வாழ்வில் இல்லை. எல்லா வகையான நீதியுமே பெரியவர்களுக்குத்தான் தேவை. இதை எல்லாம் அல்லது இதில் ஏதாவது ஒன்றையேனும் அல்லது ஒரு சதவீத அளவேனும் செய்யும் பெரியவர்கள் நாம். நாம் சொல்லும் நீதிகளைக் குழந்தைகள் ஏற்குமா, ஏற்காதா என்பது கூட ஒருபுறம் இருக்கட்டும். அதற்கும் எழுத்து தேர்வுகள் நடத்துவது முறையா? கவனம் ஆனால் குழந்தைகள் வாழ்க்கை நெறியை கற்றுக்கொள்ளவே செய்கின்றன. அமெரிக்க உளவியாளர் லாரன்ஸ் கோல்பர்க் (Lawrence Kohl berg) பல வருடங்கள் நன்னெறி உருவாக்கம் குறித்து குழந்தைகளிடையே ஆய்வுசெய்தார். “குழந்தைகள் தங்களது அன்றாட நடத்தைகள், அவர்கள் பார்த்த பிறரது நடத்தைகளைத் திறந்த மனதோடு பிறருடன் உரையாடுவதன்மூலம், விவாதிப்பதன் மூலம், நல்ல நடத்தை, தீய பாதைகளை கண்டடைகிறார்கள்” என்று அவர் அறிவித்தார். அதில் அவர்கள் தொலைக்காட்சியில் , சினிமா போன்ற ஊடகங்களில் பார்க்கும் நடத்தைகளும் அடக்கம். “குழந்தைகள் எல்லாவற்றையுமே உன்னிப்பாக கவனிக்கிறார்கள்” என்கிறார் அவர். குழந்தைகளுக்கு தங்களது அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட தொலைக்காட்சியில் கண்டதை, ரசித்ததை வகுப்பறையில் திறந்த மனதோடு கலந்துரையாட நேரம் ஒதுக்கி இருக்கிறோமா நாம்? நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை தினசரிகளில் வாசித்து, செய்திகளை விமர்சிக்க வீட்டிலோ பள்ளியிலோ அவர்களுக்கு எத்தனை பேர் வாய்ப்புகள் தருகிறோம்? நம் பள்ளிகளின் எழுதப்படாத சட்டம் என்ன? கையைக் கட்டு… வாயைப் பொத்து… கவனி…. பேசாதே… இதைத்தானே கட்டளைக்குக் கீழ்ப்படிதல் என்கிறது நமது பாடமுறை. அது வேறு என்ன நடத்தை நெறியை போதிக்க முடியும்? பவித்ரன் தந்த அதிர்ச்சி நான் பணிபுரியும் பள்ளியில் பல ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவம் இது. தீபாவளிக்கு மறுநாள் காலை பட்டாசு சத்தங்கள் ஓயாத அந்த விடுமுறை நாளில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு சிறுவன் “ஏதாவது பலகாரம்.. பழைய துணி இருக்கா பிளீஸ்… இருந்தா குடுங்க” என்று வந்து நின்றார். என் தாயாரும் துணைவியாரும் ஏதேதோ கொடுத்து அனுப்பிவிட்டு, “பாவம்…இல்லாத வீட்டு பிள்ளை’’ என்று பேசிக்கொண்டபோது சட்டென நான் ஜன்னல் வழியே கவனித்தேன். எங்கள் பள்ளியில் படிக்கும் பையன். எனக்கு மனதில் படபடப்பு அதிகமானது. பக்கத்து வீட்டுக்காரரும் எட்டிப்பார்த்து. ‘‘உங்க ஸ்கூல் பையனா” என்றார். அவர் வேறு ஒரு பள்ளியில் விளையாட்டு ஆசிரியர்… நான் சாலையை பார்த்தபடி வெளியே நின்றேன். ‘‘இந்தக் காலப் பசங்க அப்படி… இந்த மாதிரி வீடுவீடா போய் பிச்சையா வாங்கி அதை வித்துப் படத்துக்கு போவானுங்க சார்…’’ அவரது பேச்சில் இருந்த நக்கல் என்னை உசுப்பேற்றி இருக்க வேண்டும். ‘‘என்ன நடக்குதுனு பின்னால் போய்ப் பார்க்கலாமா’’ என்றேன். இருவருமாக நடந்தபோது சொன்னார். ‘இதெல்லாம் பெற்றோர்களால் வருவது சார். வீட்ல இதைக்கூடவா கவனிக்க மாட்டாங்க…’ பிறகு குரலை தாழ்த்தி ‘இவன்… அந்த சமூகமாக இருப்பான்’ அது குழந்தையின் சாதி பற்றியது என உணர்ந்து மனம் வலித்தது. நாம் குழந்தைகளை எவ்வளவு மோசமாக அனுமானிக்கிறோம். நன்னடத்தை வகுப்பெடுக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது. அந்த சிறுவனின் பின்னே சென்ற நாங்கள் எங்கள் ஊரின் பார்வையற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் இருந்தோம். அங்கே பவித்ரன் நுழைந்ததும் ஏக குதூகலம். ‘‘அண்ணா வந்துட்டாரு’’ குழந்தைகள் வரவேற்றன. தான் வீடு வீடாய்ச் சேகரித்த உடைகளை, பலகாரங்களைப் பிரித்து வழங்கி தன் தீபாவளியைப் பகிர்ந்துகொண்ட அந்த மாணவனை நான் ஆரத்தழுவிக்கொண்டேன். அதிர்ச்சியிலிருந்து மீண்ட உடன் வந்த ஆசிரியர், விபரம் கேட்டார். ‘‘பாவம் இவங்களுக்கு யாருமே இல்ல சார்’’ என்று கண்கலங்க வைத்தார் பவித்ரன். அவருக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது? ‘‘டி.வி.ல பார்த்தேன். ஸ்மால் ஒன்டர் (கார்ட்டூன்) சீரியல்ல இதேமாதிரி வந்தது’’ என்றார். மதிப்பெண்கள் அல்ல. சமூகத்தை நோக்கிய மதிப்பீடுகளை வளர்க்கவே கல்வி. அதைப் பள்ளி மட்டுமே வழங்குவதில்லை என்று எனக்குக் காட்டிய பவித்ரன் இன்று ஒரு கலைக் கல்லூரி விரிவுரையாளர்.கடைசியாகப் பார்த்தபோது தானே புயலில் பாதித்தவர்களுக்குப் பாயும் பாத்திரங்களும் சேகரிக்க மாணவர்களோடு களத்தில் இருந்தார். தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
Monday, 5 October 2015
பொதுவாக சந்தைக்கு பொருட் களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும்பாலும் சந்தோஷமாக வீடு திரும்பியதாகச் சரித்திரம் இல்லை.
புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் மதிப்புக் கூட்டுதல் எனும் மகத்தான கலை முக்கியமான பங்களிப்பை செய்து வருகிறது என்றால் மிகையில்லை. சாதாரண ஒரு விவசாயியின் வருமானத்தை, கனவை, ஆசையை மகத்தான ஒன்றாக மாற்றுகிறது மதிப்புக் கூட்டு தொழில்நுட்பம். மதிப்புக்கூட்டலைக் கற்றுக் கொண்டால் விவசாயி என்கிற நிலையிலிருந்து தொழில் முனைவர் என்கிற இடத்துக்கும் உயர்ந்து விடுகிறார். பொதுவாக சந்தைக்கு பொருட் களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும்பாலும் சந்தோஷமாக வீடு திரும்பியதாகச் சரித்திரம் இல்லை. அதே சமயம் கொஞ்சம் மாத்தி யோசித்தால் அந்த பொருட்களையே மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கின்றனர் தொழில் முன்னோடிகள். விவசாயி - தொழில்முனைவோர் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது உடனடியாக தீர்க்கக்கூடிய விஷயம் இல்லை என்பதை புரிந்து கொண்டு மாற்றுத்தீர்வுகளை யோசித்தால் மதிப்புக் கூட்டி விற்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். தென்னை விவசாயி தனது விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று காத்திருப்பதைவிட, தென்னை யிலிருந்து கிடைக்கும் பொருட்களை பல்வேறு விதமாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம். தேங்காய், இளநீர், மட்டைகள் என அப்படியே விற்பனை செய்யாமல் அதை மதிப்புக் கூட்ட பழக வேண்டும். தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் என உற்பத்தி செய்யலாம். தேங்காய் மட்டையை பதப்படுத்தி அதை பித் என்கிற வடிவில் கொண்டு வருகிறபோது அதற்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. இளநீரை கார்விங் செய்து அழகாக பேக்கிங் செய்தால் ஷாப்பில் மால்களிலும் விற்பனை செய்ய முடியும். தேங்காய் கொட்டாங்குச்சிகளை எரி பொருளாக மட்டுமே பார்க்கக்கூடாது. இதை வெளிநாடுகளில் ஒரு முறை பயன்படுத்தும் கப்புகளாக பயன்படுத்து வதால் ஏற்றுமதி செய்யலாம். ஏற்றுமதி கார்பன் தயாரிப்புக்கு பயன்படுத்துவதால் அதற்கான வாய்ப்புகளை தேட வேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக யோசனை செய்தால் மகத்தான வருமானம் கிடைக்கும் என்பதுதான் உண்மை. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு விவசாயி தேங்காய் பவுடரை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பவுடரை சாக்லெட், பிஸ்கட், கேக் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றன. வட இந்தியாவிலும் இதற்கு அதிக சந்தை உள்ளது. தூக்கி எறியும் தேங்காய் மட்டையில் உள்ள நாரைப் பிரித்தெடுத்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள் ஐரோப்பிய விவசாயிகள். அவர்களுக்குத் தேவையான நார்கள் தமிழ்நாட்டிலிருந்து செல்கிறது. மண் தொட்டியில் தேங்காய் நாரை வைத்து, பத்து லிட்டர் தண்ணீர்வரை ஊற்றினாலும் அப்படியே உறிஞ்சி தக்க வைத்துக் கொள்வதால் அதற்கு வரவேற்பு பலமாக உள்ளது. அந்த நாரில் பயிரை வைத்து வளர்க்கிறார்கள். போன்சாய் மரங்களை வளர்ப்பதற்கு இது சிறந்த முறையாக இருந்து வருகிறது. தொழிற்சாலை தேவை இல்லை அதுபோல பால் உற்பத்தியாளர்கள் உரிய விற்பனை விலை கிடைக்க வில்லை, கொள்முதல் இல்லை என பல சிக்கல்களை அனுபவிக்கின்றனர். பல நேரங்களில் கறந்த பாலை கீழே கொட்டியும் அரசின் கவனத்தை ஈர்க்கின்றனர். ஆனால் மதிப்புக் கூட்டல் முறையில் இதில் மகிழ்ச்சியான லாபம் பார்க்கலாம் என்பதுதான் உண்மை. மேலும் இந்த சிக்கல்களுக்கு மதிப்புக் கூட்டல் முறை இவர்களுக்கு தீர்வாக இருக்கும். முக்கியமாக பாலிலிருந்து பல நாட்கள் கெடாமல் இருக்கும் சீஸ் என்கிற பலாடைக் கட்டி தயாரிக்கலாம். சீஸ் தயாரிக்க பெரிய தொழிற்சாலை தான் தேவை என்றில்லை, சிறிய அளவில் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம். பத்து லிட்டர் பாலை ஒரு லிட்டராக சுருக்கி எளிய முறையில் விற்பனை செய்ய முடியும். ஒரு லிட்டர் பாலில் 100 கிராம் சீஸ்தான் தயாரிக்கலாம். ஆனால், நூறு லிட்டர் பாலின் அடக்கவிலை அதிகபட்சம் 3,000 ரூபாய் என்றால் அதிலிருந்து செய்யப்படும் 10 கிலோ சீஸின் குறைந்தபட்ச விற்பனை விலை 4,000 வரை விற்பனை ஆகிறது. உற்பத்தியில் 90% சீஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கிறது. எவ்வளவு நாட்கள் என்றாலும் கெட்டுப் போகாது. சீஸின் நாட்கள் கூடக் கூட சுவையும் மணமும் அதிகரிக்குமாம். பல மடங்கு லாபம் நெல்லிக்காய் உற்பத்தி செய்த ஒரு விவசாயி இன்று நெல்லி ஜூஸ் தயாரிப்பிலும் கலக்கி வருகிறார். அல்லும் பகலும் கஷ்டப்பட்டு நெல்லிக்காயை நெல்லிக்காயைப் பறித்துக்கொண்டு போனால் ஐந்துக்கும், பத்துக்கும் கேட்டதில் வெறுத்துப்போனவர்தான் ராஜேந்திரன். இன்று நெல்லிக்காயில் இருந்து ஜூஸ், ஜாம், சாக்லெட் போன்றவற்றைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டு தொழில்முனைவோராக நிற்கிறார். நெல்லி ஊறுகாய், நெல்லி சிப்ஸ், தொக்கு, நெல்லிப் பாக்கு சீவல், நெல்லி குளியல் பவுடர் என பல பொருட்களைத் தயாரிக்கிறார். நெல்லிக்காயை பறிச்சு விற்பனை செய்தால் ரூ.50,000 கிடைக்கும். அதையே மதிப்புக் கூட்டப்பட்ட பொரு ளாக விற்பனை செய்கிறபோது பல மடங்கு லாபம் கிடைக்கிறது என்கிறார் இவர். இதைபோல அதிக விளைச்சலால் விலை கிடைக்காமல் அவதிப்படும், தக்காளி விவசாயிகள் மாற்றி யோசிக்கலாம். ஜூஸ், ஜாம், ஊறுகாய், ரெடிமேட் மிக்ஸ் என அதிலிருந்து பல பொருட்களை தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொண்டால் வருமான இழப்பைத் தவிர்க்க முடியும். மதிப்புக் கூட்டு கலையால் தேங்காய் மட்டை போன்ற உபபொருட்களைக் கூட விற்கமுடிகிறது. சில மணி நேரங்களில் கெட்டுபோகும் பால் சீஸ், பன்னீர், பால் பவுடர், கிரீம், என்று மாறுகிறபோது நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்கிறது. இது போல ஒவ்வொரு தொழிலுலும் ஒன்றை பத்தாக மாற்றும் வித்தையை கற்றுக் கொள்வதே காலத்துக்கேற்ற மாற்றம். பொதுவாக பாரம்பரிய தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள் இந்த மதிப்புக் கூட்டலை நம்புவதில்லை. அடுத்த தலைமுறையினர் தொழிலை கையிலெடுக்கும் போதுதான் தொழில் நவீன வடிவம் பெறுகிறது. அதாவது விவசாயி என்ற நிலை மாறி தொழில் முனைவர் என்ற இடத்துக்கு உயர்த்திக்கொள்ளாதவரை விளைச் சலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று பேசிக்கொண்டிருக்க வேண்டி யதுதான். அந்த நிலை மாற வேண்டும் என்றால் மதிப்புக்கூட்டல் என்கிற மகத்தான தொழில்வடிவத்தை கற்றுக் கொள்வதே சிறந்த தீர்வாக இருக்க முடியும். maheswaran.p@thehindutamil.co.in
Tuesday, 29 September 2015
அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் -குறள்:483
சென்ற கோடை விடுமுறையில் எனது இரு பேரன்கள் பெங்களூரில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். 3 வயதும் 2 வயதும். ‘நீங்கள் கொஞ்சம் இவர்களுக்கு ஊட்டி விட்டால் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்’ என்று வீட்டில் இருப்பவர்கள் சொல்ல, நானும் நமக்குத்தான் இது 30 வருடங்களுக்கு முன்பே பழக்கமானதாயிற்றே என்று ஏற்றுக்கொண்டேன். கிண்ணத்தில் பிசைந்த சாதத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் மாயமானார்கள். நானும் பேரன்களை, டைனிங் டேபிளில் உட்கார வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். நல்ல பிள்ளைகளாக அவர்கள் முதல் வாயை வாங்கிக் கொண்டதும் எனக்குப் பெருமை, பெருமிதம், பெருமகிழ்ச்சி! ஆனால் அப்புறம் தான் ஆரம்பித்தது கச்சேரி!!. வாயில் வாங்கியதைச் சாப்பிடாமல் இருவரும் வெகுநேரம் வைத்து இருந்ததால், நானும் தமிழில், ஆங்கிலத்தில், இந்தியில், கன்னடத்தில் கெஞ்சிப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை! ‘அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஏதேனும் செய்யுங்களேன்’ என அசரீரியாக என் மனைவியின் அறிவுரை கேட்டது. மொபைலில் டெம்பிள் ரன் பார்ப்பார்கள் என்று என் சிற்றறிவுக்கு உடனே பொறி தட்டியது. அதைப் போட்டபின் வெற்றிகரமாக இரண்டு வாய் ஊட்ட முடிந்தது! ஆனால் அந்த வால்களோ, மொபைலையே பந்து போல் போட்டு விளையாடத் தொடங்கினார்கள். சாதாரணமாக எனது மொபைலை யாரையும் தொடவே அனுமதிக்காத நான், குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று! பின்னர் அதுவும் போரடித்து விட்டதால், எனது சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். நானும் சரியென்று பெரிய நோட்டுக்களை மறைத்துவிட்டு 10 ரூபாய் நோட்டு இரண்டு கொடுத்தேன். அவர்களோ 100 ரூபாய் நோட்டுக்கள்தான் வேண்டுமென்று அழுது வாங்கி மேஜையில் வைக்க அவை காற்றில் பறக்கலாயின! எனக்கு முன்பிருந்த சந்தேகம் வலுவானது. இந்தப் பயல்கள் காலையில் நாம் கொடுக்க மறுத்ததை எல்லாம் இந்த சாப்பாட்டு வேடிக்கையை வைத்து பழி வாங்குகிறார்கள் என்று புரிந்து விட்டது. என் மனைவியோ ‘என்ன சும்மா பிள்ளைகளை முறைக்கிறீர்கள்? உங்கள் பணம் முக்கியமா அல்லது அவர்கள் சாப்பிடுவது முக்கியமா?’ என ஒரு தத்துவக் கேள்வியை முன்வைத்துவிட்டார். பின்னர் என்ன? தலைமுடியைக் கலைப்பது, தண்ணீரைக் கொட்டுவது, மேஜையிலேயே பேனாவால் எழுதுவது போன்ற எல்லா சேட்டைகளையும் நான் பொறுத்துகொள்ள வேண்டியதாயிற்று! சாப்பிட மறுப்பது என்பது குழந்தைகளிடம் உள்ள அணு ஆயுதம். அதைக் கண்டு எல்ேலாரும் நடுங்குவார்கள் என குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கிறது! காரியத்தைச் சாதித்துக்கொள்ள கெஞ்சுதல், மிரட்டுதல் எனப் பல வழிகள் உண்டு. ஆனால் இவற்றைச் சரியான சந்தர்ப்பத்தில் கையாள வேண்டும். நாம் இதை குழந்தைகளிடம் இருந்து கூடத் தெரிந்து கொள்ளலாம்! உரிய கருவிகளுடன், ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல் என்பது உண்டா என்கிறார் வள்ளுவர்!! அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் -குறள்:483 somaiah.veerappan@gmail.com
முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப் பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. எந்த விதமான திட்டமும் இல்லாமல் செலவிட நேரும்போது உடனே பர்சில் கை வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. வரவுக்கு மீறி செலவு செய்வது நம்மை கடன் பொறியில் சிக்க வைக்கும் என்பதுதான் அனுபவ உண்மை. இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் 1,000 ரூபாயாவது கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது. மார்க்கெட்டில் இப்போது வெங்காயம் விலையை கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறைதான் வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், பொருள்களின் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒரு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். சிலர் செலவுகளை கட்டுப்படுத்துகின்றனர், சிலர் சேமிப்பை குறைக்கின்றனர், சிலரோ செலவுகளைக் குறைக்காமல் கூடுதல் நேரம் உழைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள் கின்றனர். அதாவது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை நம்மால் தவிர்க்க முடியாது. என்னதான் கட்டுப்படுத் தினாலும் விலைவாசியை இனிமேல் குறைக்கவும் முடியாது. அதனால் விலை ஏற்றத்திற்கு பழகிக்கொள்வதும், அதை சமாளிப்பதற்கான வழி தேடுவதுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். ஆனால் இதற்கு தனியாக திட்டமிட வேண்டாம். கொஞ்சம் முயற்சி இருந்தால் மட்டும்போதும். இதற்கேற்ப வாழ்க்கை தரத்தை திட்டமிட்டுக் கொள்வதும், செலவுகளை அமைத்துக்கொள்ளவும் வேண்டும். தவிர்க்க முடியாத அத்தியா வாசிய செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நம்மையும் அறியாமல் அல்லது திட்டமில்லாமல் செய்கின்ற செலவுகளை தவிர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவம், கல்வி, சேமிப்பு போன்றவற்றில் சமரசமில்லாமல், பெட்ரோல் , ஹோட்டல் செலவு போன்ற விஷயங்களில் கறாராக இருந்தால் நமது செலவுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும். திட்டமிடுவது கட்டுப்பாடாக செலவு செய்வது என்கிற விஷயத்தில் பலருக்கும் அலட்சியம்தான். முக்கியமாக பலருக்கு வரவு செலவு குறித்து தெளிவான திட்டமே கிடையாது. குடும்ப வருமானத்தில் அவசர செலவுகள், உடனடி தேவைக்குரிய செலவுகள், எதிர்கால திட்டத்திற்குரிய செலவுகள், கல்வி, மருத்துவ செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டு தெளிவாக ஒதுக்க வேண்டும். மாத சம்பளத்தை மட்டும் கணக்கிலெடுப்பார்கள். பிற சொத்துகள் மூலம் சில்லரையாக வரும் வருமானங்களை கணக்கில் சேர்க்காமல் செலவு செய்து செய்து கொண்டிருப் பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். சேமிப்பு எந்த நெருக்கடியிலும் சேமிப்பை விட்டுவிடக்கூடாது. அவசரத்துக்கு இதுதான் உதவும். பத்து வருடத்துக்கு முன்பு சேமிக்கத் தொடங்கியிருந்தால் இன்று அது பெரும் தொகை. இது அவசரகாலத்துக்கு மட்டுமல்ல, எதிர்கால பணவீக்கத்துக்கு ஏற்ப உங்களது செலவுகளை சமாளிப்பதற்கும் உதவும். கடன் நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கி யம். மேலதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம். கிடைத்தாலும் நமது வருமானத்தையும் தாண்டி வாங்கு வதை தவிர்க்கலாம். கடனே வாங்கக் கூடாது என்று முடிவெடுங்கள். கிரெடிட் கார்டு அவசரத்துக்கு என்று கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தொடங்கி இப்போது எதற்கெடுத்தாலும் கிரெடிட் கார்டு நீட்டுவதை வழக்கமாக வைத்திருப்பது செலவுகளை அதிகரிக்கவே செய்யும். ஒரு வருடத்தின் கிரெடிட் கார்டு பயன் பாட்டை கணக்கிலெடுத்து அதற்கு எவ்வளவு வட்டி கட்டியிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். கிரெடிட் கார்டு கையிலிருப்பது அவசியம் இல்லாத பொருட்களையும் வாங்கத் தூண்டும் என்பதும் ஞாபகத்தில் இருக்கட்டும். வாகன பயன்பாடு தனிநபர் செலவில் கணிசமான தொகை யை சாப்பிடுவது வாகனங்கள்தான். எரிபொருள், பராமரிப்பு என மாதம் ஒரு தொகை வைக்க வேண்டும். அக்கம் பக்கத்து தெருவுக்கு செல்ல வேண்டும் என்றாலும் வாகனத்துக்கு பழகி வருகிறோம். பொதுப் போக்குவரத்துக்கு பழகுவதும், நமது சொந்த வாகனங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதற்கும் பழக வேண்டும். ஷாப்பிங் வீட்டுக்குத் தேவையான பொருட்களை சில்லரையாக வாங்காமல் மொத்தமாக வாங்குவது நல்லது. அதுபோல எந்த பொருளை எவ்வளவு வாங்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும். அடுத்த மாதம்தான் ஒரு பொருளுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை இப்போதே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளக் கூடாது. தள்ளுபடி ஷாப்பிங் சலுகைகளை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் தள்ளுபடி பயனுள்ளதாக இருக்க வேண்டும். சலுகை விலையில் கிடைக்கிறது என்பதற்காக பல பொருட்களையும் வாங்கிக் குவிப்பதை தவிர்க்க வேண்டும். சில பொருட்களை 3 வாங்கினால் 1 இலவசம் கொடுப்பார்கள். நமக்கு 2 பொருள் இருந்தாலே அதிகம் என்கிற பட்சத்தில் 2 வாங்கினால் மட்டும் போதும். ஷாப்பிங் நேரத்தில் அந்த நேர முடிவுகளில் அதிக கவனமாக இருந்தால் திட்டமில்லாச் செலவுகளைத் தவிர்க்கலாம். பொழுதுபோக்கு நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு வாரந்தோறும் ஏதேனும் ஒரு இடத்துக்கு குடும்பத்துடன் வெளியே செல்லும் கலாச் சாரம் தவிர்க்க முடியாத அம்சமாக மாறி வருகிறது. இதைத் தவிர்க்க முடியாது என்றாலும், அடிக்கடி செல்வதை குறைத்துக் கொள்ளலாம். கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒரு முறை ஹோட்டல் சென்றால் குறைந்தபட்சம் 1,000 ரூபாயாவது செலவாகிறது. மின்சாரம் மின்சாரத்தை செலவு செய்வதிலும் நம்மிடம் அலட்சியம் உள்ளது. இதன் மூலமும் செலவுகள் அதிகரிக்கிறது. குறிப்பாகக் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் மின் விளக்குகளை பயன்படுத்தினால் மின்சார செலவுகளை கட்டுப்படுத்தலாம். அவசியம் இருந்தால் மட்டுமே ஏசி பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மோட்டார் இயக்குவதற்கான மின்சாரம் சிக்கனமாகும் என்கிற கண்ணோட் டத்திலும் யோசிக்க வேண்டும். செல்போன் பண்டிகை நாட்களில் சகட்டு மேனிக்கு வாழ்த்து குறுஞ்செய்திகளை அனுப்பு வார்கள். வழக்கத்தைவிட அதிகக் கட்டணம் என்றாலும் தெரிந்தே செய்யும் இந்த பழக்கம் தவிர்க்க வேண்டியதில் முக்கியம். எந்த வகையில் செலவு செய்தாலும் நமது தேவையிலிருந்தே எல்லாவற்றையும் அணுகு வேண்டும். இதனால் திட்டமில்லாத செலவுகளை தவிர்க்க முடியும். பத்து ரூபாய் பாக்கி வரவேண்டும் என்றால் அதற்கு வேறு பொருளை எடுத்து ரவுண்ட்ஆப் செய்யும் பழக்கம் கூட திட்டமில்லாத செலவுதான். எனவே எந்த இடத்தில் யோசிக்காமல் செலவு செய்கிறோம் என்பதைப் யோசி யுங்கள். ஒவ்வொரு செலவையும் நமது தேவையை ஒட்டியே இருப்பதுபோல திட்டமிடுங்கள். திட்டமில்லாத செலவு களை தவிர்ப்பதற்கு அதுவே சிறந்த வழி.
Tuesday, 8 September 2015
முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப் பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. எந்த விதமான திட்டமும் இல்லாமல் செலவிட நேரும்போது உடனே பர்சில் கை வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. வரவுக்கு மீறி செலவு செய்வது நம்மை கடன் பொறியில் சிக்க வைக்கும் என்பதுதான் அனுபவ உண்மை. இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் 1,000 ரூபாயாவது கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது. மார்க்கெட்டில் இப்போது வெங்காயம் விலையை கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறைதான் வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், பொருள்களின் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒரு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். சிலர் செலவுகளை கட்டுப்படுத்துகின்றனர், சிலர் சேமிப்பை குறைக்கின்றனர், சிலரோ செலவுகளைக் குறைக்காமல் கூடுதல் நேரம் உழைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள் கின்றனர். அதாவது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை நம்மால் தவிர்க்க முடியாது. என்னதான் கட்டுப்படுத் தினாலும் விலைவாசியை இனிமேல் குறைக்கவும் முடியாது. அதனால் விலை ஏற்றத்திற்கு பழகிக்கொள்வதும், அதை சமாளிப்பதற்கான வழி தேடுவதுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். ஆனால் இதற்கு தனியாக திட்டமிட வேண்டாம். கொஞ்சம் முயற்சி இருந்தால் மட்டும்போதும். இதற்கேற்ப வாழ்க்கை தரத்தை திட்டமிட்டுக் கொள்வதும், செலவுகளை அமைத்துக்கொள்ளவும் வேண்டும். தவிர்க்க முடியாத அத்தியா வாசிய செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், நம்மையும் அறியாமல் அல்லது திட்டமில்லாமல் செய்கின்ற செலவுகளை தவிர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவம், கல்வி, சேமிப்பு போன்றவற்றில் சமரசமில்லாமல், பெட்ரோல் , ஹோட்டல் செலவு போன்ற விஷயங்களில் கறாராக இருந்தால் நமது செலவுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும். திட்டமிடுவது கட்டுப்பாடாக செலவு செய்வது என்கிற விஷயத்தில் பலருக்கும் அலட்சியம்தான். முக்கியமாக பலருக்கு வரவு செலவு குறித்து தெளிவான திட்டமே கிடையாது. குடும்ப வருமானத்தில் அவசர செலவுகள், உடனடி தேவைக்குரிய செலவுகள், எதிர்கால திட்டத்திற்குரிய செலவுகள், கல்வி, மருத்துவ செலவுகள் போன்றவற்றை கணக்கிட்டு தெளிவாக ஒதுக்க வேண்டும். மாத சம்பளத்தை மட்டும் கணக்கிலெடுப்பார்கள். பிற சொத்துகள் மூலம் சில்லரையாக வரும் வருமானங்களை கணக்கில் சேர்க்காமல் செலவு செய்து செய்து கொண்டிருப் பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். சேமிப்பு எந்த நெருக்கடியிலும் சேமிப்பை விட்டுவிடக்கூடாது. அவசரத்துக்கு இதுதான் உதவும். பத்து வருடத்துக்கு முன்பு சேமிக்கத் தொடங்கியிருந்தால் இன்று அது பெரும் தொகை. இது அவசரகாலத்துக்கு மட்டுமல்ல, எதிர்கால பணவீக்கத்துக்கு ஏற்ப உங்களது செலவுகளை சமாளிப்பதற்கும் உதவும். கடன் நமது வருமானத்தை தாண்டி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்வது முக்கி யம். மேலதிகமாக செலவு செய்கிறோம் என்றால் கடனுக்கு வழி செய்கிறோம் என்று அர்த்தம். கிடைத்தாலும் நமது வருமானத்தையும் தாண்டி வாங்கு வதை தவிர்க்கலாம். கடனே வாங்கக் கூடாது என்று முடிவெடுங்கள். கிரெடிட் கார்டு அவசரத்துக்கு என்று கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தொடங்கி இப்போது எதற்கெடுத்தாலும் கிரெடிட் கார்டு நீட்டுவதை வழக்கமாக வைத்திருப்பது செலவுகளை அதிகரிக்கவே செய்யும். ஒரு வருடத்தின் கிரெடிட் கார்டு பயன் பாட்டை கணக்கிலெடுத்து அதற்கு எவ்வளவு வட்டி கட்டியிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். கிரெடிட் கார்டு கையிலிருப்பது அவசியம் இல்லாத பொருட்களையும் வாங்கத் தூண்டும் என்பதும் ஞாபகத்தில் இருக்கட்டும். வாகன பயன்பாடு தனிநபர் செலவில் கணிசமான தொகை யை சாப்பிடுவது வாகனங்கள்தான். எரிபொருள், பராமரிப்பு என மாதம் ஒரு தொகை வைக்க வேண்டும். அக்கம் பக்கத்து தெருவுக்கு செல்ல வேண்டும் என்றாலும் வாகனத்துக்கு பழகி வருகிறோம். பொதுப் போக்குவரத்துக்கு பழகுவதும், நமது சொந்த வாகனங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதற்கும் பழக வேண்டும். ஷாப்பிங் வீட்டுக்குத் தேவையான பொருட்களை சில்லரையாக வாங்காமல் மொத்தமாக வாங்குவது நல்லது. அதுபோல எந்த பொருளை எவ்வளவு வாங்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும். அடுத்த மாதம்தான் ஒரு பொருளுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை இப்போதே வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ளக் கூடாது. தள்ளுபடி ஷாப்பிங் சலுகைகளை தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் தள்ளுபடி பயனுள்ளதாக இருக்க வேண்டும். சலுகை விலையில் கிடைக்கிறது என்பதற்காக பல பொருட்களையும் வாங்கிக் குவிப்பதை தவிர்க்க வேண்டும். சில பொருட்களை 3 வாங்கினால் 1 இலவசம் கொடுப்பார்கள். நமக்கு 2 பொருள் இருந்தாலே அதிகம் என்கிற பட்சத்தில் 2 வாங்கினால் மட்டும் போதும். ஷாப்பிங் நேரத்தில் அந்த நேர முடிவுகளில் அதிக கவனமாக இருந்தால் திட்டமில்லாச் செலவுகளைத் தவிர்க்கலாம். பொழுதுபோக்கு நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு வாரந்தோறும் ஏதேனும் ஒரு இடத்துக்கு குடும்பத்துடன் வெளியே செல்லும் கலாச் சாரம் தவிர்க்க முடியாத அம்சமாக மாறி வருகிறது. இதைத் தவிர்க்க முடியாது என்றாலும், அடிக்கடி செல்வதை குறைத்துக் கொள்ளலாம். கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒரு முறை ஹோட்டல் சென்றால் குறைந்தபட்சம் 1,000 ரூபாயாவது செலவாகிறது. மின்சாரம் மின்சாரத்தை செலவு செய்வதிலும் நம்மிடம் அலட்சியம் உள்ளது. இதன் மூலமும் செலவுகள் அதிகரிக்கிறது. குறிப்பாகக் குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் மின் விளக்குகளை பயன்படுத்தினால் மின்சார செலவுகளை கட்டுப்படுத்தலாம். அவசியம் இருந்தால் மட்டுமே ஏசி பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மோட்டார் இயக்குவதற்கான மின்சாரம் சிக்கனமாகும் என்கிற கண்ணோட் டத்திலும் யோசிக்க வேண்டும். செல்போன் பண்டிகை நாட்களில் சகட்டு மேனிக்கு வாழ்த்து குறுஞ்செய்திகளை அனுப்பு வார்கள். வழக்கத்தைவிட அதிகக் கட்டணம் என்றாலும் தெரிந்தே செய்யும் இந்த பழக்கம் தவிர்க்க வேண்டியதில் முக்கியம். எந்த வகையில் செலவு செய்தாலும் நமது தேவையிலிருந்தே எல்லாவற்றையும் அணுகு வேண்டும். இதனால் திட்டமில்லாத செலவுகளை தவிர்க்க முடியும். பத்து ரூபாய் பாக்கி வரவேண்டும் என்றால் அதற்கு வேறு பொருளை எடுத்து ரவுண்ட்ஆப் செய்யும் பழக்கம் கூட திட்டமில்லாத செலவுதான். எனவே எந்த இடத்தில் யோசிக்காமல் செலவு செய்கிறோம் என்பதைப் யோசி யுங்கள். ஒவ்வொரு செலவையும் நமது தேவையை ஒட்டியே இருப்பதுபோல திட்டமிடுங்கள். திட்டமில்லாத செலவு களை தவிர்ப்பதற்கு அதுவே சிறந்த வழி.
Connect with facebook- facebook
Send mail to mailme
Call to :9566735348
Friday, 28 August 2015
உங்கள் வாழ்வைத் திருப்பிப் போடும் விசையில் நீங்கள் கை வைத்து விட்டீர்கள்!
Thanks for view my artical and tell us the feedback
how to improve my writing style